Latest News :

மீண்டும் வரும் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’
Monday February-06 2023

ஏவிஎம் தயாரிப்பில் பாண்டியராஜன் நடித்து இயக்கிய படம் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’. மனோரமா பாட்டியாக நடித்து 1988 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இதே தலைப்பில் மீண்டும் ஒரு படம் உருவாகியுள்ளது.

 

என்ஜாய் சினிமாஸ் மற்றும் ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தை ஹெம சூர்யா இயக்கியிருக்கிறார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் கதை மற்றும் வசனத்தை சுகுனா குமார் எழுதியுள்ளார்.

 

விஜய் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சசிகுமார் படத்தொகுப்பு செய்ய, மணிமாறன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ரவி கணேஷ் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பாளராக டைமண்ட் பாபு பணியாற்றியுள்ளார்.

 

கே.எல்.தனசேகர் மற்றும் சாய் சரவணன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நளினி பாட்டியாக நடித்திருக்கிறார். ஆர்.பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.ஜே.விஜய், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், அனுஷீலா, கே.பி.ஒய்.பாலா, செந்தில் குமார், காதல் சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னை சாந்தம் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர்கள் ராஜேஷ், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், ஆர்.பாண்டியராஜன், ஜாகுவார்  தங்கம், தயாரிப்பாளர் ரிஷிராஜ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, நடிகைகள் நளினி, அனுஷீலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

திரைப்பட இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா இசைத் தட்டை வெளியிட இசையமைப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் பெற்றுக்கொண்டார்.

Related News

8797

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery