Latest News :

சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட நான்கு வேதங்களையும் தமிழில் புத்தமாக எழுதிய முக்தா சீனிவாசன்
Friday July-28 2017

முக்தா பிலிம்ஸ் என்ற நிறுவனமும் முக்தா சீனிவாசன் என்கிற பெயரும் சினிமா பொற்காலமாக திகழ்ந்த கால கட்டத்தில் கோலோச்சிய பெயர்கள். தரமான படங்களை தயாரித்து வழங்கிய இவர்கள் இன்று ஹைடெக் சினிமா சுனாமியால் காணாமல் போய் விட்டார்கள். இவர்களின் ஒவ்வொரு படைப்புமே இன்று வரை நினைவில் நிற்பவை.

 

சினிமாத்துறையிலிருந்து சற்று ஒதுங்கி இருந்தாலும் முக்தா சீனிவாசன் எழுத்து துறையை ஒதுக்கி விட வில்லை. இது வரை 250 புத்தகங்கள எழுதி இருக்கிறார். சுமார் 1000 சிறுகதைகள் கட்டுரைகளை எழுதி இருக்கிறார். திரைத்துறைக்குள் காலடி வைத்து 70 ஆண்டுகளை கடந்து விட்டேன். 50 படங்களுக்கு மேல் இயக்கி தயாரித்து விட்டேன். அதில் கிடைத்த அதே அளவு மன நிறைவை எழுத்தின் மூலம் பெற்றிருக்கிறேன். நாம் கற்றதை மற்றவர்களும் பயன் பெற வேண்டும் என்பதால் வீட்டுக்குள்ளேயே ஒரு நூலகத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். யார் வேண்டுமானாலும் எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் அதுவும் இலவசமாக. திருப்பி தந்து விட வேண்டும் என்ற அன்பு கட்டளையுடன்.

 

இப்போது எனக்கு மன நிறைவை தந்திருப்பது சமீபத்தில் நான் எழுதிய புத்தகம் தான். நமக்காக வேற்று மொழியான சமஸ்க்ருதத்தில் இயற்றப்பட்ட ரிக் வேதம் யஜுர் வேதம் சாம வேதம் அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களையும் எல்லோருக்கும் புரிகிற மாதிரி சுத்தமான தமிழில் சதுர் வேதம் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறேன். இன்றைய தலை முறையினர் இதையெல்லாம் ஈசியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

 

எழுத்தை நான் நேசிக்கிறேன், எழுதுவதை நான் நேசிக்கிறேன், வயோதிகம் என்பது பிழையில்லை, என்பதை உணர்ந்ததால் எழுதுகிறேன் படிக்கிறேன், என்றார் முக்தா வி சீனிவாசன்.

Related News

88

இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை! - உற்சாகத்தில் ‘லோகா - அத்தியாயம் 1’ படக்குழு
Thursday September-04 2025

நடிகர் துல்கர் சல்மான் தனது வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’...

’பனை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Wednesday September-03 2025

பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...

குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக ‘குமாரசம்பவம்’ உருவாகியுள்ளது - இயக்குநர் பாலாஜி வேணுகோபால்
Wednesday September-03 2025

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

Recent Gallery