அதர்வாவின் ‘தணல்’ படப்பிடிப்பு முடிவடைந்தது!
Saturday February-11 2023

‘பட்டத்து அரசன்’ படத்தை தொடர்ந்து அதர்வாவின் அடுத்த வெளியீடாக ‘தணல்’ படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கும் இப்படத்தை அன்னை பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம். ஜான் பீட்டர்  தயாரிக்கிறார்.

 

‘100’ மற்றும் ‘ட்ரிகர்’ படங்களை தொடர்ந்து இப்படத்தில் மீண்டும் போலீஸ் வேடத்தில் அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார். இவர்களுடன் அஷ்வின் காக்குமானு, ஷா ரா, பரணீ செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்‌ஷ்மி பிரியா, பரத், தௌபிக், சர்வா, பிரதீப் விஜயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். விவேக் மற்றும் கார்த்திக் நேதா பாடல்கள் எழுதியுள்ளனர். எஸ்.அய்யப்பன் கலையை நிர்மாணிக்க, கலைவாணன் படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு, திரைப்பட வெளியீட்டு தேதி போன்றவற்றை ஒவ்வொன்றாக படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

8809

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery