அருள்நிதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘தேஜாவு’. இப்படத்தை இயக்கிய அரவிந்த் ஸ்ரீனிவாசன், தெலுங்கில் நவீன் சந்திராவை வைத்து ‘ரிபீட்’ என்ற படத்தையும் இயக்கினார். ஒரே ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த அரவிந்த் ஸ்ரீனிவாசன், தற்போது தனது இரண்டாவது தமிழ்ப் படத்திற்காக ’குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வினுடன் கைகோர்த்துள்ளார்.
ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாகும் இப்படத்தினை ழென் ஸ்டுடியோஸ் (ZHEN Studios) சார்பில் புகழ் தயாரிக்கிறார். இந்நிறுவனத்துடன் ஆர்கா என்டர்டைன்மெண்ட்ஸ் (ARKA ENTERTAINMENTS) நிறுவனம் இப்படத்தினை இணைந்து தயாரிக்கிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...