தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் மித்ரன் ஆர்.ஜவஹர். இவர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது.
இந்த நிலையில், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கியிருக்கும் படத்திற்கு ‘அரியவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அறிமுக நடிகர் ஈஷான் நாயகான நடித்திருக்கிறார். நாயகியாக அறிமுக நடிகை ப்ராணலி நடித்திருக்கிறார். இவர்களுடன் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி, ரவி வெங்கட்ராமன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பல்வேறு வன்முறைகளுக்கு தீர்வு சொல்லும் விதமாக உருவாகியுள்ள இப்படத்தின் கடையை மாரிச்செல்வன் எழுதியிருக்கிறார். கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்ய, மா.தியாகராஜன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். எம் ஜி பி மாஸ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வழங்குகிறது.

இந்த நிலையில், ‘அரியவன்’ படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று (பிப்.12) வெளியிட்டார். மோஷன் போஸ்டர் வெளியான சிலி மணி நேரங்களில் சோசியல் மீடியாக்களில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரைலரை படக்குழு விரைவில் வெளியிட திட்டமிட்டிருப்பதோடு, படத்தை வரும் மார்ச் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...