சிம்பு - அனிருத் கூட்டணியின் பீப் பாட்டால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது மீண்டும் அதே கூட்டணி மூலம் ஒரு பாட்டு உருவாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்கை போடு போடு ராஜா’ படத்திற்காக தான் சிம்பு - அனிருத் கூட்டணி மீண்டும் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள சிம்பு, தான் போட்ட மெட்டுக்களில் ஒன்றில் அனிருத்தை பாட வைத்துள்ளார்.
இப்படால் குறித்து கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசி வந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இப்பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
விடிவி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சேதுராமன் இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...