Latest News :

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அருள்நிதி நாயகனாக நடிக்கும் ‘திருவின் குரல்’!
Saturday February-18 2023

இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ், உச்ச நடிகர்கள் மற்றும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை மட்டும் தயாரிக்காமல், அனைத்து தரப்பு பார்வையாளின் இதயத்தையும் வென்ற உள்ளடக்கம் சாந்த பொழுதுபோக்கு படங்களையும் தயாரித்து வருகிறது.

 

இந்த நிலையில், லைகா நிறுவனத்தின் 24 வது படத்திற்கு ‘திருவின் குரல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அருள்நிதி நாயகனாக நடிக்க, நாயகியாக ஆத்மிகா நடிக்கிறார். அருள்நிதியின் தந்தை வேடத்தில் இயக்குநர் பாராதிராஜா நடித்திருக்கிறார்.

 

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்குகிறார். இவர் ‘பண்ணையாரும் பத்மியும்’, ‘சேதுபதி’ போன்ற படங்களில் இயக்குநர் அருண்குமாரிடமும், ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

 

படத்தின் தலைப்பில் ’திருவின் குரல்’ எனக் குறிப்பிடுவது போல கதாநாயகனது கதாபாத்திரம் பேச்சு குறைபாடு இருப்பவராக (speech impairment) சித்தரிக்கப்பட்டுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை படம் கூற இருக்கிறது. அருள்நிதி மகனாக நடிக்க, மூத்த இயக்குநரான பாரதிராஜா அவரது தந்தையாக நடிக்கிறார். ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார். சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன், முல்லையரிசி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

 

’திருவின் குரல்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் 42 நாட்களில் முடிவடைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும், சென்னையில், நகர்ப்புற பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல  இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

 

சாம் சிஎஸ் இசையமைக்க, சின்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட உள்ளது.

Related News

8829

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery