நடிகர் சரத்குமாரின் மூத்த மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், அவரது இளை மகள் பூஜா சரத்குமாரும் தமிழ் சினிமாவில் நடிகையாக உள்ளார்.
‘போடா போடி’ மூலம் ஹீரோயினாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் வரலட்சுமி நடித்து வருகிறார். தமிழில் இப்படத்திற்கு ‘சக்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குநர் இயக்குகிறார்.
இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று நடிகர் சரத்குமார் வெளியிட்டு, ‘சக்தி’ படக்குழுவினரை வாழ்த்தினார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சரத்குமாரின் இளைய மகளும், வரலட்சுமியின் தங்கையுமான பூஜா சரத்குமார் நடிக்க உள்ளார்.
தங்கை நடிகை ஆனது குறித்து கருத்து தெரிவித்த வரலட்சுமி, பூஜாவுக்கு ஒரு நல்ல ஆரம்பமாக அமையும், என்று கூறியவர், தங்கையுடன் இணைந்து ஒரே படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...