கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட ‘பருந்தாகுது ஊர் குருவி’ படத்தின் முதல் பாடல்!
Wednesday February-22 2023

அறிமுக இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்வைவல் திரில்லர் ஜானர் திரைப்படம் ‘பருந்தாகுது ஊர் குருவி’. நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் முதல் பாடலான “மதயானைக்கூட்டம்...” வெளியாகி வைரலாகி வருகிறது.

 

சமீபத்தில் நடைபெற்ற ’கே.பி.ஆர் இன்ஸ்டியூஷன் கோயமுத்தூர் ஃபெஸ்டா 2023’ கல்லூரி விழாவில் 6 ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில், மாணவர்களின் கைகளால் ‘பருந்தாகுது ஊர் குருவி’ படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது.

 

இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி இசையில் அவரும் ராகுல் நம்பியாரும் இணைந்து பாடியுள்ள இப்பாடலை, பாடலாசிரியர் விதாகர் எழுதியுள்ளார். படத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடல், படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. இணையம் முழுக்க வைரலாகி வரும் இப்பாடல் யூடியூப் தளத்தில்  பெரும் பார்வை எண்ணிக்கைகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

 

கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும், இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனைத் தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாகப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

 

இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையைப் படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். ‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது...'  எனும் கருத்தில், திறமை மிகு இளைஞர்கள் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ளது ’பருந்தாகுது ஊர் குருவி’ படம். 

 

இப்படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ராட்சசன் வினோத் சாகர், அருள் டி.சங்கர், கோடங்கி வடிவேல், இ.ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

Parundhaguthu Oor kuruvi

 

இயக்குநர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும்  லைட்ஸ் ஆன் மீடியா தனது முதல் படைப்பாக இப்படத்தைத்  தயாரிக்கிறது.  சுரேஷ் இ.ஏ.வி, சுந்தர கிருஷ்ணா.பி, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். 

 

அஷ்வின் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நாகூரான் ராமசந்திரன், நெல்சன் அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளனர். ரெஞ்சித் உன்னி இசையமைக்க, ஓம் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். விவேக் செல்வராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

Related News

8836

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery