அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘தேஜாவு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசன், இயக்கும் இரண்டாவது படத்தை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழும், ஆர்கா என்டெர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.
அஸ்வின் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்கள் முன்பு வெளியான நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக தர்புகா சிவா ஒப்பந்தமாகியுள்ளார்.
’கிடாரி’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘முதல் நீ முடிவும் நீ’ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் தர்புகா சிவா, இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருப்பது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அருள் சித்தார்த் படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் பற்றிய அறிவிப்புகளும், படத்தில் இணையும் தொழில்நுட்ப கலைஞர்களாலும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...