ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த மித்ரன் ஆர்.ஜவஹரின் இயக்கத்தில் உருவான ‘அரியவன்’!
Sunday February-26 2023

தனிஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹரின் இயக்கத்தில், அறிமுக நடிகர் ஈஷான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அரியவன்’. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கும் இயக்குநர் மித்ரன் ஹவஹர், அறிமுக நடிகரை ஹீரோவாக வைத்து இயக்கியிருக்கும் சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் ஜானர் திரைப்படமான இப்படம் பற்றிய தகவல் வெளியான நாள் முதல் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள், டீசர், டிரெய்லர் ஆகியவற்றால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

டேனியல் பாலாஜி வில்லனாக மிரட்டியிருக்கும் இப்படத்தில் சத்யன், சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். 

 

இந்த நிலையில் இந்த படம் பற்றி படக்குழு சில தகவல்களை வெளியிட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மித்ரன் ஆர் ஜவஹர் அவர்கள் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து இயக்கி இருப்பதாகவும் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பதில் பாராட்டையும் பெரும் வகையில் அரியவன் திரைப்படம் இருக்கும் என தெரிவித்துள்ளது.  அதற்கேற்றார் போல் தற்போது இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

வரும் மார்ச் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘அரியவன்’ படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பால் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related News

8842

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery