யாரிப்பாளர் போனி கபூர் - நடிகை ஸ்ரீதேவி தம்பதியின் மகளான ஜான்வி கபூர் இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நிலையில், தற்போது தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். என்.டி.ஆர் நடிப்பில், பிரபல இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகும் இன்னும் தலைப்பு வைக்கப்படாத படத்தின் மூலம் ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தின் தற்காலிக தலைப்பாக ‘என்.டி.ஆர் 30’ என்று வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜான்வி கபூரின் பிறந்தநாளையொட்டி அவரை தெலுங்கு திரையுலகிற்கு வரவேற்கும் வகையில் ‘என்.டி.ஆர் 30’ படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ”#NTR30-ன் பரபரப்பான உலகத்தில் அடிக்கும் புயலில் அமைதியான ஒரு மலர் போன்றவர் ஜான்வி. பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து ஜான்வி கபூரை வரவேற்கிறோம்” படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
என்.டி.ஆர் உடன் இணைந்து பணியாற்ற தான் பெரிதும் விரும்புவதாக கூறிய நடிகை ஜான்வி கபூர், என்.டி.ஆர் ஒரு ஜாம்பவான் என்றும் தெரிவித்துள்ளார்.
யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் பேனர்களின் கீழ் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா இப்படத்தை தயாரிக்கின்றனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசையமைக்கிறார். சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பை கையாள்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆக்ஷன் எண்டர்டெய்னரை நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார்.
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்குப் பிறகு என்.டி.ஆர் நடிக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இப்படத்தை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார்...
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...