Latest News :

பப்ளிக் ஸ்டார் மற்றும் பப்ளிக்குடன் சேர்ந்து ‘அயோத்தி’ படம் பார்த்த சசிக்குமார்!
Wednesday March-08 2023

அறிமுக இயக்குநர் ஆர்.மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘அயோத்தி’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் பாலிவுட் குணச்சித்திர  நடிகர் யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, புகழ், அஞ்சு அஸ்ரானி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

கடந்த வாரம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ஊடகங்களிடமும், மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மதத்தை போற்றுவதை விட மனிதநேயத்தை போற்ற வேண்டும், என்ற கருத்தை மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கும் இப்படம் அனைத்து பகுதிகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவதோடு, பார்த்தவர்கள் அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

 

Sasikumar and Durai Sudhakar

 

இந்த நிலையில், படத்தின் நாயகன் சசிகுமார், தஞ்சை மாவட்டத்தின் பிரபல தொழிலதிபரும், நடிகரும் தயாரிப்பாளருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகருடன் சேர்ந்து தஞ்சையில் உள்ள ராணி பேரடைஸ் திரையரங்கில் மக்களோடு மக்களாக ‘அயோத்தி’ படம் பார்த்துள்ளார்.

 

மக்களுடன் சேர்ந்து ‘அயோத்தி’ படம் பார்க்க வந்த சசிகுமாருக்கு தஞ்சை மக்களும், நடிகர் துரை சுதாகரும் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, படம் முடிந்த பிறகு அவரை பாராட்டி கெளரவித்தார்கள்.

 

Sasikumar and Durai Sudhakar

 

‘அயோத்தி’ படத்திற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாக கூறிய நடிகர் சசிகுமார், இதுபோன்ற படங்கள் வெற்றி பெற்றால் தான் நல்ல திரைப்படங்களின் வருகை அதிகரிக்கும் என்றும், தெரிவித்தார்.

 

Sasikumar and Durai Sudhakar

 

பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் பேசுகையில், “நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள் திரைப்படமாகும் போது அவை மனதுக்கு நெருக்கமாகி விடுகிறது. இது போன்ற வாழ்வியல் படங்களையும், நம் மக்களை மையப்படுத்திய படங்களை இயக்கியும், நடித்தும் வரும் சசிகுமார் சாரின் ‘அயோத்தி’ திரைப்படம் தற்போதைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு மக்களும் பார்க்க வேண்டிய படமாக உள்ளது. இப்படி ஒரு சிறப்பான படத்தை மக்களோடு மக்களாக சேர்ந்து பார்த்ததும், படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பும் மகிழ்ச்சியளிக்கிறது. ‘அயோத்தி’ படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டும், குறிப்பாக பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தை பார்த்தால் மனிதநேயம் என்றால் என்ன? என்பதை புரிந்துக்கொள்வார்கள்.” என்றார்.

 

Sasikumar and Durai Sudhakar

Related News

8860

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery