Latest News :

ஆரி அர்ஜுனனின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகிறது
Thursday March-09 2023

அறிமுக இயக்குநர் யு. கவிராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்'. இதில் ஆரி அர்ஜுனன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சாஸ்வி பாலா நடித்திருக்கிறார். இவர்களுடன் பக்ஸ் என்ற பகவதி பெருமாள், மொட்டை ராஜேந்திரன் , பிஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 

ஜெ. லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பை இயக்குநர் u.கவிராஜ் கையாள, கலை இயக்கத்தை பி. சேகர் கவனித்திருக்கிறார். ஃபேண்டஸி காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராவுத்தர் ஃபிலிம்ஸ்  சார்பில் தயாரிப்பாளர் ஏ முஹம்மது அபூபக்கர் தயாரித்திருக்கிறார். ஏ எம் மன்சூர் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். 

 

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் முன்னோட்டம் வெளியாகி லட்ச கணக்கிலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த நிலையில், வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் சரஸ்வதி எண்டர்பிரைசஸ் சார்பில் டி.செந்தில்குமார் வெளியிடுகிறார்.

 

ஏழ்மையில் வசித்து வரும் ஆரி அர்ஜுனனுக்கு வேற்று கிரகத்திலிருந்து சதுர வடிவிலான வினோத பொருள் ஒன்று கிடைக்கிறது. இதனால் இவருக்கு அதீத சக்தி உண்டாகிறது. இதன் மூலம் அவர் தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும், இந்த பூமிக்கும் நன்மையை செய்தாரா? அல்லது வேற்றுக்கிரகவாசிகள் இதனை மீண்டும் கைப்பற்றுவதற்காக பூமிக்கு வந்தார்களா? என்ற சுவாரசியமான கேள்வி இடம் பெற்றிருப்பதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8863

நடிகை ரித்விகாவுக்கு விரைவில் திருமணம்! - ஐடி ஊழியரை மணக்கிறார்
Wednesday July-16 2025

'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார்...

’மாரீசன்’ படத்தின் டிரைலர் வெளியானது!
Tuesday July-15 2025

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்'  திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இப்போது சினிமா உண்மையிலேயே மிக மோசமாக இருக்கிறது - ஆர்.வி.உதயகுமார் கவலை
Tuesday July-15 2025

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...

Recent Gallery