Latest News :

சூரிக்காக பெரிய பட்ஜெட் படம்! - இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கத்தின் அசத்தல் அப்டேட்
Friday March-10 2023

’அரும்பு மீசை குறும்பு பார்வை’, ‘வெண்ணிலா வீடு’, ‘விசிறி’ என்று தரமான படங்களை இயக்கிய இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம், சிறு இடைவெளிக்குப் பிறகு அசத்தல் அப்டேட்டுடனும், இரண்டு படங்களுடனும் மீண்டும் கோலிவுட்டில் களம் இறங்கியுள்ளார்.

 

‘விடுதலை’ படத்தின் மூலம் நாயகன் அவதாரம் எடுத்திருக்கும் சூரியை ஹீரோவாக வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் வெற்றிவீரன் மகாலிங்கம், ’அருவி’, ‘கர்ணன்’, ’கொரில்லா’ சமீபத்தில் வெளியான ‘அயலி’ இணையத் தொடர் போன்றவற்றில் குணத்திர வேடங்களில் நடித்து பாராட்டு பெற்று வரும் ‘அருவி’ மதனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

 

இப்படி இரண்டு திரைப்படங்களுடன் கோலிவுட்டில் மீண்டும் களம் இறங்குவது குறித்து நம்மிடம் பகிர்ந்துக்கொண்ட இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம், “சூரியும் நானும் பால்யகால  நண்பர்கள். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து ரகளையா ஒரு கதை பண்ணினோம். பட்ஜெட் பெரியது, விரைவில் அந்தப் படம் குறித்த அறிவிப்பு வரும்.

 

’விடுதலை’ படத்தில் ஒப்பந்தம் ஆனதில் இருந்து ”காமெடியனா என்னை ஏத்துக்கிட்ட மக்கள், இப்போ கதையின் நாயகனாக நடிக்கிறத எப்படி ஏத்துக்கப் போராங்கன்றத  நெனச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு நண்பா” என்று சூரி சொல்லிகிட்டே இருப்பார். இப்போ, விடுதலை டிரைலர்  வந்த பிறகு கிடைக்கிற வரவேற்பை பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு. வெற்றிமாறன் சாரோட உழைப்பு அபாரமானது. இந்த சமயத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு நான் கதை திரைக்கதை  எழுதி இருப்பது ஒரு நண்பனாக இரட்டிப்பு மகிழ்ச்சி.

 

தெளிவான பார்வையுடன் சொல்லப்பட்ட கதையை ஒரு மாபெரும் கார்ப்பரேட் நிறுவனம் தயாரிக்க தேர்வு செய்யப்பட்டிருப்பது எனது அடுத்த கட்ட பயணத்திற்கான பாதை சரியானது தான் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.” என்றார்.

 

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை தொடர்ந்து சகுந்தலா டாக்கீஸ் வழங்க, தனது மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஒரு படத்தை தயாரித்து இயக்கும் வெற்றிவீரன் மகாலிங்கம், அப்படத்தில் ‘அருவி’ மதனை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.

 

Aruvi Madhan and Vetriveeran Mahalingam

 

பல முன்னணி நட்சத்திரங்களை இப்படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ள இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம், ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பை நடத்திடவும் முடிவு செய்துள்ளார்.

 

இப்படம் பற்றி இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம் கூறுகையில், “நான் ஏற்கெனவே இயக்கிய மூன்று படங்கள் மூலம் சில அனுபவங்களைப் பெற்றுள்ளேன், அந்த அனுபவத்தின் துணையோடு நல்ல சினிமாவை மக்கள் கொண்டடியே தீருவார்கள் என்ற முழு நம்பிக்கையுடனும், புது வெளிச்சத்தோடு இப்போது களத்திற்கு வந்திருக்கிறேன்.

 

இது முழுக்க முழுக்க நகரம் சார்ந்த பின்னணிக் கதை. எனது அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் சுவாரசியமான  உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாக்கியிருக்கிறேன். 20 நாட்களில் முழு படமும் முடிக்க திட்டமிடிருக்கிறேன்.” என்றார்.

 

தற்போது படதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம், விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளார்.

Related News

8865

நடிகை ரித்விகாவுக்கு விரைவில் திருமணம்! - ஐடி ஊழியரை மணக்கிறார்
Wednesday July-16 2025

'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார்...

’மாரீசன்’ படத்தின் டிரைலர் வெளியானது!
Tuesday July-15 2025

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்'  திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இப்போது சினிமா உண்மையிலேயே மிக மோசமாக இருக்கிறது - ஆர்.வி.உதயகுமார் கவலை
Tuesday July-15 2025

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...

Recent Gallery