தனது தனித்துவமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்து வரும் வசந்த் ரவி, ‘தரமணி’, ‘ராக்கி’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘அஸ்வின்ஸ்’ (ASVINS) என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். சைக்கலாஜிக்கல் ஹாரர் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை தருண் தேஜா இயக்குகிறார்.
சென்னை மற்றும் ஜெர்மனியின் வொல்ப்ஸ்பர்க் என இரண்டு பகுதிகளையும் தனது இருப்பிடமாக கொண்டுள்ள தருண் தேஜா, பல குறும்படங்களை இயக்கி பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில் சில ஐரோப்பிய சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றதோடு, ஐரோப்பாவில் உள்ள சுயாதீன திரைப்பட சமூகத்தில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளன.
தருண் இப்போது தனது 20 நிமிட பைலட் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய ‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். இது குறும்படமாக வெளியான போதே விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் திகைக்க வைத்து பாராட்டுகளைப் பெற்றது.
இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவைச் சுற்றி வரும் இந்த திரைப்படம் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் வகையைச் சேர்ந்தது. இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பிவிஎஸ்என் பிரசாத் தயாரித்துள்ளார். பாபிநீடு பி இந்தப் படத்தை வழங்குகிறார் மற்றும் இணைத் தயாரிப்பாளராக பிரவீன் டேனியல் உள்ளார்.
வசந்த் ரவி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் விமலா ராமன், ‘ராகெட்ரி’ பட புகழ் முரளிதரன், சரஸ் மேனன், ‘நிலா காலம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற உதய தீப், சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
விஜய் சித்தார்த் இசையமைக்கும் இப்படத்திற்கு எட்வின் சகே ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார்.
'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார்...
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...