‘ஈரம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகும் படம் ‘சப்தம்’. முதல் அறிவிப்பின் மூலமாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம், தற்போது ஒவ்வொரு தகவல்கள் மூலமாக எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகை லைலா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக, நடிகை லக்ஷ்மி மேனன் இணைந்தார். இந்நிலையில் அடுத்ததாக தற்போது, முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்திருப்பது ரசிகர்களிடம் பேராவலை தூண்டியுள்ளது. லைலாவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும் வகையிலும், மிக அழுத்தமான பாத்திரமாகவும் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.

காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. ஆல்பா பிரேம் இயக்குநர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ்ச்ச் சிவா இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஈரம் படத்தில் இந்த வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பரபரப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் பார்வை, டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...