ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க ஹாங்காங் புறப்பட்ட 'பொன்னியின் செல்வன்' படக்குழு!
Saturday March-11 2023

தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி திரைப்படமான ‘பொன்னியின் செல்வன் - பாகம் 1’ பல்வேறு விருதுகளை பெற்ற நிலையில், 16 வது ஆசிய திரைப்பட விழாவில் 6 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், நாளை (மார்ச் 12) ஹாங்காங்கில் நடைபெற உள்ள ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ‘பொன்னியின் செல்வன் - பாகம் 1’ படக்குழு ஹாங்காங் புறப்பட்டது.

 

லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சார்பாக ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம்  சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஹாங்காங் சென்றுள்ளனர். இவர்களுடன் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர்பிரசாத், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோரும் ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

 

சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு என 6 விருதுகளுக்கு ‘பொன்னியின் செல்வன் - பாகம் 1’ பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

8871

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery