Latest News :

பிரஜின் நடிப்பில் உருவாகியுள்ள ’D3’ மார்ச் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
Monday March-13 2023

பீமாஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மனோஜ்.எஸ் தயாரிப்பில், பாலாஜி இயக்கத்தில், பிரஜின் நாயகனாக நடித்திருக்கும் சஸ்பென் திரில்லர்  படம்  ‘D3’.

 

ஹன்சிகா நடிப்பில் உருவாகும் ‘மேன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் மணிகண்டன்.பி.கே இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்ற “மனம் ஒரு கொதிகலனா...?” என்ற பாடலுக்கு இசை அமைத்தவர். ஜெயசீலன் கலை இயக்குநராக பணியாற்ற, ராம்போ விமல் சண்டைப்பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், வரும் மார்ச் 17 ஆம் தேதி தமிழகம் முழுவதும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

இப்படம் குறித்து இயக்குநர் பாலாஜி கூறுகையில், “படத்தின் கதை என்னவென்றால் ,எந்த குற்றச் செயலைச் செய்பவனும் குற்றம் செய்த இடத்தில் ஏதாவது ஒரு தடயத்தை அவனை மீறி விட்டுச் செல்வான் என்பது பிரபஞ்ச உண்மை .அப்படி இந்தப் படத்தின் கதையில் குற்ற நிகழ்வு நடந்த இடத்தில் குற்றவாளி  ஒருவன் ஒரு வார்த்தையை மட்டும் விட்டுச் செல்கிறான். அந்த வார்த்தைக்கான காரணத்தின் நுனி தேடி காவல்துறை மோப்பம் பிடித்துத் தொடர்ந்து குற்றத்தின் காலடித்தடயம் அறிந்து  குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வழக்கை முடிப்பது தான் இந்தக் கதை. இப்படம் ஒரு தொடர்  படைப்புரீதியில் உருவாக்கி உள்ளது.  இதன் முந்தைய 2 பாகங்கள் விரைவில் வெளியாகும்.

 

D3 படப்பிடிப்பு பல்வேறு கட்ட சோதனைகளையும் தடைகளையும் தாண்டி நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சிகள் தொடங்கிய அன்று நாயகன் பிரஜின் ஓட்டிய கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த படம் பெரும்பாலும் கோவிட் காலத்தில் படமாக்கப்பட்டது.  அப்போது படக்குழுவைச் சேர்ந்த 10 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. அதையும் தாண்டித்தான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.” என்றார்.

Related News

8874

’மாரீசன்’ படத்தின் டிரைலர் வெளியானது!
Tuesday July-15 2025

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்'  திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இப்போது சினிமா உண்மையிலேயே மிக மோசமாக இருக்கிறது - ஆர்.வி.உதயகுமார் கவலை
Tuesday July-15 2025

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...

சிம்புவின் சக்திவேல் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து தான் நடித்தேன் - நடிகர் டீஜே
Tuesday July-15 2025

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...

Recent Gallery