Latest News :

தந்தை இறப்பு குறித்து நடிகர் அஜித்குமார் வெளியிட்ட அறிக்கை!
Friday March-24 2023

நடிகர் அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி உடல்நலக்குறைவால் மார்ச் 24 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்த நிலையில், சென்னை பெசண்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது.

 

இந்த நிலையில், தந்தையின் இறப்பு குறித்து நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் அனுப் குமார், அனில் குமார் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “எங்களது தந்தையார் திரு.பி.எஸ் மணி (85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

 

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

 

எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

 

இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலே, கைபேசியோலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

 

எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அஞுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இரங்கல் செய்தியை அனுப்புவதற்காக psmanifamily@gmail.com என்ற இ-மெயில் ஐடி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

Related News

8889

’மாரீசன்’ படத்தின் டிரைலர் வெளியானது!
Tuesday July-15 2025

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்'  திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இப்போது சினிமா உண்மையிலேயே மிக மோசமாக இருக்கிறது - ஆர்.வி.உதயகுமார் கவலை
Tuesday July-15 2025

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...

சிம்புவின் சக்திவேல் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து தான் நடித்தேன் - நடிகர் டீஜே
Tuesday July-15 2025

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...

Recent Gallery