அகில் சந்தோஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா நடித்திருக்கும் ‘ரேசர்’!
Sunday March-26 2023

அறிமுக நடிகர் அகில் சந்தோஷ் கதாநாயகனாகவும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் புகழ் லாவண்யா கதாநாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘ரேசர்’. இவர்களுடன் ஆறுபாலா, திரெளபதி புகழ் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி சதீஷ் என்கிற சாட்ஸ் ரெக்ஸ் இயக்கியிருக்கிறார்.

 

ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரிக்க, சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி ( ரெடால் மீடியா ஒர்க்ஸ்) இணை தயாரிப்பு செய்திருக்கிறார். பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பரத் இசையமைத்திருக்கிறார். கனியமுதன் கலை இயக்குநராக பணியாற்ற, சீனு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனையை மையமாக கொண்டு இதன் கதை அமைந்துள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் பெரிய பைக்  ரேசர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் அகில் சந்தோஷ். ஆனால் அவர் கேட்கும் விலை உயர்ந்த  ரேஸ் பைக்கை தந்தையால் வாங்கி தர முடியவில்லை. ஆனாலும்  தனது லட்சியத்தில் பின்வாங்காத அகில் தானே  கஷ்டப்பட்டு பைக் வாங்கி ரேஸில் சாதிக்க முயல்கிறார். இதற்கிடையில் அவர் சந்திக்கும் போராட்டங்கள் அதை மீறி அவரால் சாதிக்க முடிந்ததா  என்பதை விறுவிறுப்புடன் படம் விளக்குகிறது. இதற்கிடையில் இளவட்ட காதல் கதையும் இழையோடுகிறது.

 

இப்படத்துக்காக பாண்டிச்சேரியில்  பெரும் பொருட் செலவில் பைக் ரேஸ் நடக்கும் பந்தய மைதானம் அமைக்கப்பட்டது.  இந்த போட்டியின் முக்கிய காட்சிகள் ஏற்காட்டில் படமாக்கப்பட்டது. மேலும் சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது. 

 

மோட்டார் ரேஸ் காட்சிகளில் நிஜ ரேஸ் வீரர்களுடன் ஹீரோ அகில் போட்டிபோட்டு பைக் ஓட்டி அனைவரையும் ஆச்சரியத்தில்  ஆழ்த்தினார்.  லட்சியத்துடன்  வாழும் ஒவ்வொரு இளைஞனுக்கும் தன்னம்பிக்கை  தரும் படமாக உருவாகியிருக்கும் 

’ரேசர்’ வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. 

 

ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

Related News

8894

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery