Latest News :

இயக்குநராகும் மனோஜ் பாரதிராஜா! - குருவிடம் வாழ்த்து பெற்றார்
Sunday March-26 2023

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, தனது தந்தை பாராதிராஜ இயக்கத்தில், மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான ‘தாஜ்மஹால்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நாயகனாக நடித்தவர் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், மனோஜ் பாராதிராஜா தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கும் முதல் திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா முகிய முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார். மேலும், புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தின் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இம்மான இறுதியில் தொடங்க உள்ள நிலையில், படத்தின் முதல் பார்வை வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. 10 முன்னணி இயக்குநர்கள் முதல் பார்வையை வெளியிட உள்ளனர்.

 

Bharathiraja and Manoj Bharathiraja

 

இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ள மனோஜ் பாரதிராஜா, இயக்குனர் மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது அதனையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார்.

 

அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கும் மனோஜ் பாரதிராஜா, இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் ஜி வி பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

பாராதிராஜா நடிப்பில், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரிப்பதில் தனக்கு பெரும் மகிழ்ச்சி என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

Related News

8895

ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகும் ‘கருப்பு பல்சர்’!
Friday January-16 2026

யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

Recent Gallery