இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இணையத் தொடர் ‘செங்களம்’. அபி & அபி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரித்திருக்கும் இத்தொடர் ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
9 பாகங்களாக வெளியாகியிருக்கும் ‘செங்களம்’ தொடரில் இடம்பெற்றுள்ள கதபாத்திரங்களின் வடிவமைப்பு, வசனம் மற்றும் காட்சிகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதால் மக்களிடம் மட்டும் இன்றி அரசியல் பிரமுகர்கலிடம் இத்தொடர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழின் முதல் அரசியல் சம்பந்தமான முழு நீள இணையத்தொடராக வெளியாகியுள்ள செங்களம், அரசியலின் கோர முகத்தையும், அரசியல்வாதிகளின் மறுபக்கத்தையும் படம்ப்பிடித்துக் காட்டியுள்ளது. இதுவரையிலான திரை வரலாற்றில் அரசியல்களம் எப்படி இருக்கும் அரசியலுக்குள் பதவிக்காக நிகழும் போட்டி, பொறாமை, துரோகம் என ஒரு முழு நீள அரசியல் களத்தை நெருக்கமாக அணுகிய வகையில் மிக முக்கிய படைப்பாக மாறியிருக்கிறது ‘செங்களம்’.
இந்த நிலையில், ’செங்களம்’ தொடருக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன், நடிகை ஷாலி நிவேகாஸ் மற்றும் நடிகர் டேனியல் முதலான படக்குழுவினர் இன்று பேரறிஞர் அண்ணா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடம், புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் நினைவிடம், புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவிடம் மற்றும் இறுதியாக காமராஜர் நினைவிடத்திற்கு சென்று, மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் துப்புறவு பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி, இணையத்தொடரின் வெற்றியை கொண்டாடினர்.
விமர்சகர்கள் மற்றும் ரசிர்களிடம் ஒரு சேர வரவேற்பை குவித்துள்ள இத்தொடர், வெளியானதிலிருந்தே, ஜீ5 தளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பார்வைகளை குவித்து வெற்றி பெற்றுள்ளது.
குளோபல் ஸ்டார் நடிகர் ராம் சரண், 'வி மெகா பிக்சர்ஸ்' என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகில் தனது அடுத்த பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளார்...
சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களில் இணைந்து நடிக்க நிகிலா விமல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ’போர் தொழில்’ திரைப்படத்தை E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் & எப்ரியஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது...
பிவிஆர் திரையரங்குகளில் தென்னிந்திய தலைமை அதிகாரியான மீனா சாப்ரியா, தனது வாழ்க்கை சுயசரிதத்தை ‘அன்ஸ்டாப்பபல்’ (UNSTOPPABLE) என்ற தலைப்பில் எழுதியுள்ளார்...