2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதியன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மகாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் நடிகை யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், விபத்தில் பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு குணமடைந்த யாஷிகா, மீண்டும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கியதோடு, தனது தோழி பவானி பற்றி சமூக வலைதளப் பக்கங்களில் உருக்கமாக பதிவிட்டு வந்தார்.
செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது நடைபெற்று வந்த நிலையில் மார்ச் 21 ஆம் தேதி, வழக்கு தொடர்பான விசாரணைக்கு யாஷிகா ஆஜராக வேண்டியதாக இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து, வரும் மார்ச் 25 ஆம் தேதிக்கு நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி ஒருவேளை அவர் ஆஜராகவில்லை என்றால் அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற மற்றும் பழமையான தயாரிப்பு நிறுவனமான ஏ...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ 5 - ல் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி வெளியான ’ரேகை’ இணையத் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது...