வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடித்திருக்கும் ‘விடுதலை - பாகம் 1’ திரைப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.
தனித்துவமான கதைகளை உருவாக்கி அதை மக்களுடன் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்தும் வகையில் படமாக்கும் இயக்குநர் வெற்றிமாறனின் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்று வருவதால் ‘விடுதலை - பாகம் 1’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி பத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் மேக்கிங் வீடியோ பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது. அதிலும், படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் மிரட்டலாக இருப்பதோடு, படக்குழுவினர் மிக கடினமாக உழைத்திருப்பதையும் வெளிக்காட்டியிருக்கிறது.
3 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவின் ஒவ்வொரு காட்சிகளையும் பார்க்கும் போது பிரமிப்பாக இருப்பதோடு, பல கேமராக்கள் மூலம் பல கோணங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த காட்சிகள் திரைப்படத்தில் எப்படி வந்திருக்கும்? என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
வரும் மார்ச் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘விடுதலை - பாகம் 1’ படத்தின் டிகெட் முன்பதிவு தொடங்கி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தற்போது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி முழுமையான 24 மணி நேரம் ஆவதற்கு முன்பாகவே சோசியல் மீடியாக்களில் வைரலாகி டிரெண்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Reliance Retail’s premium fashion and lifestyle brand AZORTE made waves in the South with the opening of its all-new store at Phoenix Marketcity, Chennai...
கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ்...
தொடர் வெற்றி பட நாயகனான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம், இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது...