அஜித் நாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘அமராவதி’. செல்வா இயக்கிய இப்படத்தை சோழா கிரியேஷன்ஸ் சார்பில் சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார்.
காதல் திரைப்படமான இப்படத்தில் அஜித் அரும்பு மீசையுடன் நடிக்க ,அவருக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். 1993 ஆம் ஆண்டு வெளியான இப்படமும், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிட படத்தின் தயாரிப்பாளர் சோனா கிரியேஷன்ஸ் சோழா பொன்னுரங்கம் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து கூறிய தயாரிப்பாலர் சோழா பொன்னுரங்கம், “எளிமை, அன்பு, கொடை என அனைத்து நற்குணங்களுக்கும் சொந்தக்காரராக உயர்ந்து நிற்கிறார் அஜித் குமார். அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, அஜித் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, வருகின்ற மே மாதம் 1 ஆம் தேதி, அஜித் குமார் பிறந்தநாளில், அவரின் முதல் படமான ‘அமராவதி’ படத்தை டிஜிட்டலில் வெளியிடுகிறோம்.” என்றார்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...