Latest News :

”இதற்கு காரணம் நான் அல்ல, நீங்க மட்டும் தான்!” - வைரலாகும் சிலம்பரசனின் வீடியோ
Wednesday March-29 2023

இயக்குநர் ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘பத்து தல’ மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே நாளை (மார்ச் 30) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இதற்கிடையே, படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதோடு, இதுவரை படம் பார்த்த பிரபலங்கள் பலர் படம் மிகப்பெரிய மாஸ் படமாக வந்திருப்பதாகவும், படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், படம் வெளியீட்டை தொடர்ந்து தமிழக மக்களுக்கு நடிகர் சிலம்பரசன் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக மக்களுக்கு வணக்கம், உங்களுக்கு தெரியும் பத்து தல படம் 30 ஆம் தேதி வெளியாகிறது. படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்குனும், பெரிய ஓபனிங் இருக்குனும் சொல்றாங்க. ஆனால், இதற்கு காரணம் நான் இல்லை. என்னுமுடைய முந்தைய படங்கள் வெற்றி பெற்றதால் தான் இது நடக்கிறது என்பது இல்லை. நீங்க கொடுத்த ஆதரவு மட்டும் தான் இதற்கு காரணம்.

 

பத்து தல படம் இவ்வளவு பெரிய வெளியீடாக அமைந்தது என்றால் நீங்க கொடுத்த ஆதரவு மட்டும் தான். அதற்கு நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது, ரொம நன்றி. படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்து கொண்டாடுங்க, குடும்பத்தோடு வாங்க. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. 

 

இயக்குநர் கிருஷ்ணா மிக சிறப்பாக படத்தை இயக்கியிருக்கிறார். ரஹ்மான் சாரோட இசை மற்றும் பீஜியம் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஏற்கனவே பாடல்களுக்கு நீங்க பெரிய வரவேற்பு கொடுத்திருக்கீங்க. இந்த் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கிறேன்.

 

உங்களோட அன்பும், ஆதரவும் எனக்கு கண்டிப்பாக் என்றும் தேவை, நீங்க இல்லாம நான் இல்லை. லவ் யூ ஆல்.” என்று சிலம்பரசன் பேசியிருக்கிறார்.

 

சிலம்பரசனின் இந்த வீடியோ செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

Related News

8901

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery