பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வந்த ‘வணங்கான்’ திரைப்படம் சில காரணங்களால் பாதியில் கைவிடப்பட்ட நிலையில், அருண் விஜயை நாயகனாக வைத்து இயக்குநர் பாலா மீண்டும் ‘வணங்கான்’ படத்தை தொடங்கினார். இதில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகிறார்கள்.
கடந்த மாதம் கன்னியாகுமரியில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தற்போது முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில், படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் திருவண்ணாமலையில் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...