அருண் விஜயின் படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் லைகா புரொடக்‌ஷன்ஸ்!
Monday April-03 2023

இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பல பிரமாண்ட திரைப்படங்களை தயாரித்து வருவதோடு, பல வளரும் கலைஞர்களின் படங்களையும் தயாரித்து அவர்களுக்கான முகவரியை வழங்கி வருகிறது. அதேபோல் பல தரமான படங்களை வெளியிட்டும் வருகிறது.

 

அந்த வகையில், விஜய் இயக்கத்தில், அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர்’ படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ள லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், அப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது.

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு, அனைத்துத் தரப்பிலான பார்வையாளர்களையும் கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளது. மொழிகளைத் தாண்டி, அனைத்து தரப்பினருக்கும் போய் சேரும் வகையிலான கதையம்சத்தைக் கொண்டுள்ளதால், நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. படத்தின் ட்ரைய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.  

 

பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். 

 

Lyca Subaskaran

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர் மற்றும் வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

 

ஏ.மகாதேவ் கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு வசனம் எழுதி விஜய் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். 

Related News

8912

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery