சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான கவினுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர் வட்டத்தை உருவாக்கிய நிலையில், கவின் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘டாடா’ நல்ல வரவேற்பை பெற்றதோடு, வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கவினுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம், ‘டாடா’ வெற்றிக்குப் பிறகு கவின் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும், அந்த சம்பளத்தை கொடுத்து அவரை புக் செய்ய தயாரிப்பாளர்களும் தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில், ஏற்கனவே நடிப்பதாக ஒப்புக்கொண்டு முன்தொகை வாங்கிய தயாரிப்பாளர்களிடம், உயர்த்தப்பட்ட புதிய சம்பளம் வேண்டும், என்று கவின் அடம்பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய சம்பளத்தை கொடுத்தால் மட்டுமே அப்படங்களை தொடங்குவதென்று முடிவு செய்துள்ள கவின், தனது மார்க்கெட் உயர்ந்திருப்பதால் அதற்கு ஏற்றபடி கதையும் இருக்க வேண்டும், என்று கூறி ஒப்புக்கொண்ட படங்களின் கதைகளில் மாற்றங்களை சொல்லி, அப்படங்களை தொடங்காமல் தவிர்த்து வருகிறாராம்.
கவினின் இந்த நடவடிக்கையால அவருக்கு முன்தொகை கொடுத்த தயாரிப்பாளர்கள் கதறுகிறார்களாம். ஆனால், அவர்களுடைய கதறலை காதில் வாங்காத கவின், தனது அடுத்த படமாக நடன இயக்குநர் சதீஷ் இயக்குநர் அவதாரம் எடுக்கும் படத்தை தேர்வு செய்திருக்கிறாராம்.
உதயநிதி நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’, ‘வீட்ல விஷேசம்’ போன்ற படங்களை தயாரித்த ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அனிருத் இசையமைப்பில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவதோடு, அவை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பதால் அந்த படத்தில் நடிக்க கவின் உடனே ஓகே சொன்னதோடு, படப்பிடிப்பையும் விரைவாக தொடங்க சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
இந்த படத்தை தனது அடுத்த படமாக கவின் தேர்வு செய்ததற்கு அனிருத் இசை தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், உண்மையான காரணம் கவின் கேட்ட அதிகமான சம்பளத்தை தயாரிப்பாளர் ராகுல் கொடுப்பதற்கு சம்மதித்தது தான் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...