தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான பிரியன், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் பல வெற்றி பாடல்களை எழுதியுள்ளார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் பிரியன், ‘அரணம்’ படம் மூலம் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.
”மஸ்காரா போட்டு மயக்குறியே...”, ”மக்காயலா மக்காயலா...”, ”வேலா வேலா வேலாயுதம்...”, ”உசுமுலாரசே உசுமுலாரசே..”, ”செக்ஸி லேடி கிட்ட வாடி...”, ”மனசுக்குள் புது மழை விழுகிறதே..” என தனது பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிரியன், ‘அரணம்’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் ரசிகர்களை கவர தயராகியுள்ளார்.
இப்படத்தில் பிரியனுக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார். இவர்களுடன் ’ராட்டினம்’, ’எட்டுத்திக்கும் மதயானை’, ’சத்ரு’ போன்ற திரைப்படங்களின் கதாநாயகனாக நடித்த லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நித்தின் கே.ராஜ் மற்றும் இ.ஜே.நெளசத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாஜன் மாதவ் இசையமைத்துள்ளார். பிரியன், முருகானந்தம், பாலா, சஹானா ஆகியோர் பாடல்கள் எழுத, பி.கே படத்தொகுப்பு செய்துள்ளார். பழனிவேல் கலை இயக்குநராக பணியாற்ற, ரக்கர் ராஜ்குமார் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ராம்சிவா மற்றும் ஸ்ரீசெல்வி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரியன் இயக்க, தமிழ்த்திரைக்கூடம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், ‘அரணம்’ படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று ‘அரணம்’ முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டனர்.
தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் ‘அரணம்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...