Latest News :

’மாஸ்டர்’ மகேந்திரன் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கும் ’ரிப்பப்பரி’! - ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ்
Thursday April-06 2023

விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக மாறுபட்ட வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்த மகேந்திரன், மீண்டும் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ரிப்பப்பரி’. ஏகே தி டால்ஸ்மேன் (AK THE TALESMAN) நிறுவனம் சார்பில் நா.அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியிருக்கும்  இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டதிலிருந்தே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் சமீபத்தில் விஜய் சேதுபதி வெளியிட்ட இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், இசை ரசிகர்களின் டாப் லிஸ்டில் இருந்து வருகிறது. 

 

கிராம பின்னணியில் யூடுயூப் குக்கிங் சேனல் நடத்தி வரும் மூன்று இளைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை பற்றியது தான் இப்படத்தின் கதை. 6 முதல் 60 வயது வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காமெடி டிராமா கலந்த, அசத்தலான திகில் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது. 

 

முக்கியமாக ஒரே வீட்டுக்குள் நடக்கிற  வழக்கமான திகில் காமெடியாக இல்லாமல், மாறுபட்ட வித்தியாசமான திரைக்கதையில் நிறைய திருப்பங்களுடன் உருவாகியுள்ள ‘ரிப்பப்பரி’ திரைப்படத்தின் குரங்கு பொம்மை டீசர் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதோடு, படத்தின் மீதான ஆவலை தூண்டுகிறது. 

 

மாஸ்டர் மகேந்திரன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

திவாரகா தியாகராஜன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ம்கேன் வேல் படத்தொகுப்பு செய்திருக்கிறார். 

 

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘ரிபப்பரி’ திரைப்படம் வெளியாகிறது.

Related News

8918

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery