இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கும் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நயன்தாராவின் 75 வது திரைப்படமாக உருவாகும் இப்படம், இதுவரை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தப் படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதில், நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.
நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் சென்னையின் சில பகுதிகளில் நடைபெற உள்ளது.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமன்.எஸ் இசையமைக்கிறார். பிரவீன் ஆடண்டனி படத்தொகுப்பு செய்ய, ஜி.துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். அருள் சக்தி முருகன் வசனம் எழுத சஞ்சய் ராகவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...