மீண்டும் பட தயாரிப்பில் இறங்கிய நடிகர் தனுஷ்!
Tuesday April-11 2023

நடிகர் தனுஷ் நடிகராக மட்டும் இன்றி வுண்டர் பார் பிலிம்ஸ் என்ற நிறுவனம் மூலம் பல தரமான படங்களை தயாரித்தும் வந்தார். சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில், தயாரிப்பாளராக பெரும் நஷ்ட்டத்தை சந்தித்ததால் திரைப்படங்கள் தயாரிப்பதை நிறுத்திய தனுஷ், தற்போது மீண்டும் தயாரிப்பில் இறங்குகிறார்.

 

இந்த முறை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து திரைப்படம் தயாரிக்க உள்ள தனுஷ் அப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தை தனது வுண்டர் பார் நிறுவனம் மூலம் தயாரிப்பதோடு, அதில் நாயகனாகவும் தனுஷ் நடிக்க உள்ளார்.

 

தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். 

 

விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் பாராட்டுக்களைக் குவித்து, வெற்றி பெற்ற ‘கர்ணன்’ திரைப்படத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வுண்டர் பார் பிலிம்ஸ்  நிறுவனங்கள் இந்த புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

 

இந்தப் படத்தில், பல்வேறு பிராந்திய திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

Related News

8928

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery