Latest News :

தினேஷ் மாஸ்டர் - யோகி பாபு கூட்டணியில் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் ‘லோக்கல் சரக்கு’! - விரைவில் வெளியாகிறது
Wednesday April-12 2023

’ஒரு குப்பைக் கதை’, ‘நாயே பேயே’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இப்படத்தில் தினேஷுடன் யோகி பாபுவும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். உபாசனா ஆர்.சி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

டிஸ்கவர் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வலண்டினா சுவாமிநாதன், டாக்டர்.பத்மா வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு எம்.மூவேந்தர் மற்றும் கே.எஸ்.பழநி ஒளிப்பதிவு செய்கின்றனர். ஜே.எப்.கேஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்ய, முஜ்பூர் ரகுமான் கலையை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

கொரோனா காலகட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், நடுத்தர குடும்பத்தலைவர் பொறுப்பில்லாதவராக இருந்தால், அந்த குடும்பம் எவ்வழியில் செல்லும் என்பதை அழுத்தமாக சொல்வதே இப்படத்தின் கதை. மேலும், இப்படத்தின் க்ளைமாஸ் பெண்கள் மன தைரியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதை மிக அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.  மொத்தத்தில், குடும்ப கதையை காமெடியாக சொல்லியிருந்தாலும், பெண்கள் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை மிக எதார்த்தமாகவும், கமர்ஷியலாகவும் படம் சொல்கிறது.

 

நடன இயக்குநர் தினேஷ் மற்றும் யோகி பாபு ஆகியோரது கூட்டணியின் காமெடிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருப்பதோடு சமூகத்திற்கான நல்ல மெசஜை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்ஷியல் திரைப்படமாகவும் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் கொடுத்திருக்கிறார்.

 

’அழகர் மலை’, ‘சுறா’, ‘பட்டைய கிளப்புவோம் பாண்டியா’ உள்ளிட பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் காமெடி காட்சிகள் உருவாக்கத்தில் தலைசிறந்தவர் என்பது அனைவரும் அறிந்தது தான். அதிலும் ‘லோக்கல் சரக்கு’ படத்தில் மதுப்பழக்கத்தை வைத்து அவர் உருவாக்கியிருக்கும் காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் வந்திருக்கிறதாம்.

 

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷிடம் பல வருடங்களாக உதவியாளராக பணியாற்றிய இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், பல திரைப்படங்களில் ஹிட் பாடல்களை , பல தனியிசை பாடல்கள் மூலமாகவும் பிரபலமானவர்.

 

’லோக்கல் சரக்கு’ படத்தில் இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் ஒரு குத்து பாடல்கள் மற்றும் ஒரு மெலோடி பாடல் இடம்பெற்றுள்ளது. பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் வகையில் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்திருப்பதோடு, டிரெண்ட் செட் பாடலாகவும் அமைந்துள்ளது.

 

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் டீசர் ஸ்டார் மியூசிக்கில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

 

கொரோனாவை வீழ்த்தும் லோக்கல் சரக்கு படம் முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளது.

Related News

8932

நடிகை சரோஜா தேவி வாழ்க்கை வரலாறு!
Monday July-14 2025

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது - மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி
Monday July-14 2025

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

Recent Gallery