வைரலாகும் காளிதாஸின் ‘அவள் பெயர் ரஜ்னி’ பட டீசர்!
Tuesday April-18 2023

‘விக்ரம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்த காளிதாஸ் ஜெயராம், நடிப்பில் உருவாகும் படம் ‘அவள் பெயர் ரஜ்னி’. காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில்  நடித்துள்ளனர்.

 

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைக்கும்,  துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

 

தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பரபரப்பான விசாரணை, அதன் பின்னால் அவிழும் பல முடிச்சுகள், காளிதாஸ் ஜெயராமின் அசத்தல் நடிப்பு என, ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கும்  அட்டகாசமான திரில்லருக்கு உண்டான அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது. 

 

நவரசா ஃபிலிம்ஸ் சார்பில் ஸ்ரீஜித்.கே.எஸ் மற்றும் பிளெஸ்ஸ்லி ஸ்ரீஜித் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் சென்னை பொள்ளாச்சி கொச்சின் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தீவிரமான நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்க உள்ளது.

 

 

ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு 4 மியூசிக்ஸ் இசையமைக்க, தீபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வின்செண்ட் வடக்கன், டேவிட் கே.ராஜன் வசனம் எழுத ஆஷிக்.எஸ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.ஆக்‌ஷன் நூர்,கே.கணேஷ் குமார், அஷரஃப் குருக்கள் ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

Related News

8943

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery