தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசன், ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ என தொடர் வெற்றிகளை கொடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார். இதனால் அவரது ரசிகரகள் உற்சாகத்தில் இருக்க, அவர்களை கூடுத குஷிப்படுத்தும் விதமாக இன்று நேரில் சந்தித்ததோடு, அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியிருக்கிறார் நடிகர் சிலம்பரசன்.
சிலம்பரசனின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பில், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்களுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்துக்கொண்டார்கள். அனைவரும் கலந்துரையாடியதோடு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சிலம்பரசன், அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து உபசரித்திருக்கிறார். அதிலும், தனது கையால் அனைவருக்கும் பிரியாணி போட்டும் மகிழ்வித்துள்ளார்.
”எனக்காக நிறைய அவமாங்களை சந்தித்த என் ரசிகர்களை இனி அந்த நிலைக்கு தள்ள மாட்டேன், இனி அவர்கள் மகிழ்ச்சியாக மட்டுமே இருப்பார்கள், அதற்கான மட்டுமே நான் உழைப்பேன், நிறைய படங்களில் நடிப்பேன்” என்று ‘பத்து தல’ பட நிகழ்வில் நடிகர் சிலம்பர்சன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...