இந்தியாவின் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் தமிழ் திரையுலகில் களம் இறங்குகிறது. இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் முதல் தமிழ்ப் படத்திற்கு ‘போர் தொழில்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் இப்படத்தின் தலைப்பு பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வெளியிட தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும் என படக்குழு உறுதி அளித்துள்ளது.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...