Latest News :

இணையத் தொடரில் நடிக்க இது தான் காரணம்! - நடிகை அபிராமி கூறிய விளக்கம்
Wednesday April-19 2023

ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகும் இணையத் தொடர்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகத்தில் இருப்பதால், அத்தளத்தின் தொடர்களுக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், ‘செங்களம்’ தொடரின் வெற்றியை தொடர்ந்து ஜீ5 தளத்தின் அடுத்த தமிழ் இணையத் தொடராக ‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’ வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த தொடர், பள்ளி மாணவர்களின் வாழ்க்கை பின்னணியை கொண்ட க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. 

 

இந்த தொடரில், ‘விருமாண்டி’ புகழ் நடிகை அபிராமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் நடிக்கும் முதல் இணையத் தொடர் இதுவாகும். மேலும், ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

சொல் புரொடக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் (Sol Production Pvt.Ltd) நிறுவனம் சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த தொடரின் கதையை அனிதா எழுத, திரைக்கதை மற்றும் வசனத்தை என்.பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர். விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்.

 

ஏப்ரல் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ள ‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’ தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.

 

Oru Kodai Murder Mystery

 

நடிகை அபிராமி, முதல் முறையாக இணையத் தொடரில் நடித்த அனுபவம் குறித்து கூறுகையில், “இந்த மாதிரி பிரஸ் மீட் எனக்கு புது அனுபவம். முதலில் எனக்கு வாய்ப்பளித்த ஜீ5- க்கு நன்றி. இது எனது முதல் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸ்க்கு அணுகும்போதே முழு திரைக்கதையும் தந்தார்கள். எனக்கு மர்டர் மிஸ்டரி ரொம்ப பிடிக்கும். இதன் திரைக்கதை மிகவும் பிடித்தது. இதில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களும் மிகச்சிறந்த திறமைசாலிகள், அவர்களின் திறமையால் அழகாக இதனை உருவாக்கியுள்ளார்கள். பொதுவாக ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் போது, டைட்டில் கேரக்டர் நடிப்பார்கள். ஆனால் நான் இந்த வெப் சீரிஸ் நடிக்க காரணம் இதன் திரைக்கதை தான், அவ்வளவு அற்புதமாக இருந்தது. டீன் பசங்களின் உலகை அவ்வளவு தத்ரூபமாக எழுதியிருந்தார்கள். அதே போல் என் கதாபாத்திரம் அம்மா பாத்திரம் அத்தனை அழகாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

நடிகர் ராகவ் பேசுகையில், “இந்த சீரிஸ் பாம்பே நிறுவனத்தின் தயாரிப்பு,  எழுத்தாளரும் மும்பையை சேர்ந்தவர். ஆன்லைனில் ஆடிசன் கேட்டிருந்தபோது,  நான் இதில் வாய்ப்புக் கேட்டேன். அவர்கள் சார்மிங்காகவும் இருக்கனும் வயலண்டாகவும் இருக்கனும் அப்படி ஒரு ஆள் தேவை என்றார்கள். இதே காரணத்திற்காக தான் பாலசந்தர் சார் என்னை நடிக்க வைத்தார். என்னைப்பற்றி அவர்களுக்கு தெரியாது என்பதால், நான் ஒரு காட்சி நடித்து அனுப்பினேன். அவர்களுக்கு பிடித்து என்னை நடிக்க வைத்தார்கள். கௌஷிக் உடன் முன்பாகவே இணைந்து ஒரு சீரிஸ் வேலை பார்த்தோம் அது வெளியாகவில்லை, ஆனால் இந்த சீரிஸில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருமே மிகச்சிறந்த திறமைசாலிகள் இந்த சீரிஸ் சிறப்பாக வர வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்  நன்றி.” என்றார்.

 

இயக்குநர் விஷால் வெங்கட்  பேசுகையில், “சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்கு நீங்கள் மிகப்பெரிய ஆதரவைத் தந்தீர்கள் அதற்கு மிகப்பெரிய நன்றி. இந்த வெப் சீரிஸ் இயக்கச் சொல்லி ஜீ5 யிலிருந்து கால் வந்தது. Sol Production Pvt.Ltd  உடன் முன்னதாகவே அஸிஸ்டெண்டாக வேலை பார்த்துள்ளேன். இந்த சீரிஸ் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. மிகக்குறைந்த காலகட்டத்தில், இந்த வெப் சீரிஸை எடுத்தோம். அதற்கு ஒளிப்பதிவாளர், எடிட்டர், குழுவினர் அனைவரும் மிகப்பெரும் தூணாக இருந்தார்கள். அபிராமி மேடம், லிசி மேடமுடன் வேலை பார்த்ததில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்த சீரிஸில் நடித்த டீன் பசங்க அனைவருமே பிரமிக்க வைத்தார்கள். திரைக்கதை வசனத்தை எழுதிய N பத்மகுமார்  மற்றும் ரோஹித் நந்தகுமாருக்கு நன்றி. கதை எழுதிய அனிதா மேடத்துக்கு நன்றி. முக்கியமாக இந்த வாய்ப்பை அளித்த ZEE5 க்கு நன்றி. ஒவ்வொரு வேலையுமே கற்றுக்கொள்ளும் நல்ல அனுபவமே. இந்த சீரிஸ் நன்றாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

ஜீ5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன் பேசுகையில், “’ஒரு கோடை Murder Mystery’ எங்கள் பயணத்தில் ஒரு புதுமையான வெப் சீரிஸ். செங்களம் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்குப் பிறகு இந்த சிரீஸ் முழுக்கவே புதுமையானதாக இருக்கும். முதல் முறை இன்றைய தலைமுறையின் டீன் டிராமா, நவீன தலைமுறை ரசிக்கும் திரில்லராக இது உருவாகியுள்ளது. இதன் வரவேற்பைப் பார்க்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம். முந்தைய வெப் சீரிஸ் போல் இதற்கும் உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறோம்.” என்றார்.

 

Oru Kodai Murder Mystery

 

ஜீ5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன்  பேசுகையில், “சம்மரில் சூடான மர்டர் மிஸ்டரி கூலான பிரதேசத்திலிருந்து தர விரும்பினோம். அபிராமி மேடம் ஐஸ்வர்யா மேடம் நிறைய புதுமுகங்கள் நடிப்பில், இந்த வெப் சீரிஸ் தொழில் நுட்ப ரீதியாக மிக அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. செங்களம் சீரிஸுக்கு நல்ல ஆதரவைத் தந்தீர்கள். ஒவ்வொரு முறையும் புதுமையான அனுபவத்தைத் தரவே உழைத்து வருகிறோம். இந்த சீரிஸ் உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறோம்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஃபாசிலா அல்லானா பேசுகையில், “கௌசிக் நரசிம்மன் மற்றும் சிஜு பிரபாகரன் சொன்னது போல் இது கொஞ்சம் புதுமையான திரில்லர். ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நம்புகிறோம். இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். அளவற்ற ஆதரவு தந்த ஜீ5  நிறுவனத்திற்கு நன்றிகள்.” என்றார்.

 

‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’ இணையத் தொடரின் டிரைலர் வெளியான ஒரு சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் டிரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

8952

நடிகை சரோஜா தேவி வாழ்க்கை வரலாறு!
Monday July-14 2025

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது - மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி
Monday July-14 2025

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

Recent Gallery