Latest News :

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Monday April-24 2023

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டியோஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.

 

வேற்றுகிரகவாசி கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால் படம் முடிய நீண்ட வருடங்கள் ஆன நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ‘அயலான்’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து படத்தை வெளியிடும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே.ராஜேஷ் கூறுகையில், “இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி. ’அயலான்’ திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம்.  அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. 

 

திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 

 

இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.” என்றார்.

 

Ayalaan

 

கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த புதிய உலகமாக உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடனம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Related News

8957

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery