தனித்துவமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி, படம் என்றாலே மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. அந்த வகையில், அருள்நிதி நடித்து வரும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படமும், அருள்நிதியின் மாறுபட்ட தோற்றமும், படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் கார்த்தி, நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
டத்தின் டீசருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததால் நடிகர் அருள்நிதி உற்சாகமடைந்துள்ளார்.
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கும் இப்படத்தை ‘ராட்சசி’ படத்தை இயக்கிய சை.கெளதமராஜ் இயக்குகிறார்.
துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார் மற்றும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதாஸ்வா, ராஜா சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்திருக்க யுகபாரதி பாடல்களை எழுதுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் நாகூரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...