’உருச்சிதை’ படத்தின் டிரைலர் வெளியானது
Wednesday April-26 2023

வி.டி.எஸ் சினிமாஸ் சார்பில் வேணுகோபால் தேவராய் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எம்.சி.வி.தேவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘உருச்சிதை’. அறிமுக நடிகர் காத்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சுகுணா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நெல்லை சிவா, தீப்பெட்டி கணேசன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நடித்த கடைசி திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜெ ஆனந்த் இசையமைத்துள்ளார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை லக்ஷ்மண் கவனிக்கிறார். சண்டைகாட்சிகளை தீப்பொறி நித்யா வடிவமைத்துள்ளார்.  

 

எங்கேயும் நடந்திருக்க முடியாத கேள்விப்பட்டிராத கதையம்சத்துடன் குடும்பப்பாங்கான அதேசமயம் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் மே 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், ‘உருச்சிதை’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை கில்ட் தலைவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் வெளியிட்டார்.

Related News

8962

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery