Latest News :

”நீ வா நண்பா நான் இருக்கிறேன்” - விஷாலை உற்சாகப்படுத்திய விஜய்!
Thursday April-27 2023

நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், விஜய் உடனான அவரது திடீர் சந்திப்பு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆதிக் ரசிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் நடித்து வரும் படம் ‘மார்க் ஆண்டனி’. மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மாலை படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

 

இந்த நிலையில், நடிகர் விஷால் தனது ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசர் வெளியாவதற்கு முன்பாக அதை நடிகர் விஜய்க்கு காண்பிக்க விரும்பியுள்ளார். அவரது விருப்பம் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டதும் ஒடே ஓகே சொன்ன விஜய், விஷாலுடம் பட குழுவினரை அழைத்துள்ளார்.

 

Vishal meet Vijay

 

அதன்படி, ’மார்க் ஆண்டனி’ டீசரை பார்த்து மகிழ்ந்த விஜய், படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டினார். அதற்கு விஷால் நன்றி தெரிவிக்க, “நண்பனுக்காக இதை செய்ய மாட்டேனா” என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியடைய செய்தது.

 

தளபதி விஜய் அவர்களுக்கு படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள், புரட்சி தளபதி விஷால் அவர்கள் வழக்கம் போல் பூங்கொத்தை தவிர்த்து தளபதி விஜய் அவர்களின் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் அவரிடம் வழங்கினார்.  

 

அதன் பின் தனது  நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை ‘துப்பறிவாளன் 2’ மூலம் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜயிடம்  கூறிய விஷால் அதன் பின் தொடர்ந்து திரைப்படங்களை கதைகளை இயக்க உள்ளதாகவும் தங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாக  நடிகர்  விஜயிடம் நடிகர் விஷால் கூறிய போது  ”நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்த்து பயணிப்போம்” என்று  விஜய் கூறி மேலும் உற்சாகப்படுத்தினர்.

 

Vishal Meet Vijay

 

இச்சந்திப்பின் போது ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ‘மினி ஸ்டூடியோஸ்’ வினோத் குமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர்  அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

Related News

8964

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery