Latest News :

உதயநிதி கையில் கத்தி, வடிவேலு கையில் துப்பாக்கி! - வைரலாகும் ‘மாமன்னன்’ முதல் பார்வை போஸ்டர்
Monday May-01 2023

திமுக இளைஞரணி தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அரசியல் அதிகாரம் பெறுவதற்கு முன்பாக சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக அங்கீகாரம் பெற்றவர். தீவிர அரசியலில் ஈடுபட்ட பிறகும், அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதோடு, அவரது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திரைப்பட விநியோகத்தில் படு தீவிரம் காட்டி வருகிறது.

 

இதற்கிடையே, உதயநிதி நடிப்பில் ‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், வடிவேலு முக்கியமான வேடத்திலும் நடிக்கிறார்கள்.

 

இதற்கிடையே, ‘மாமன்னன்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், மே 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்த நிலையில், அதற்கு முன்னதாகவே சமூக வலைதளங்களில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் கசிந்துவிட்டது. இதனால், அறிவித்த நாளுக்கு முன்னதாக, அதாவது நேற்றே படக்குழு ‘மாமன்னன்’ முதல் பார்வை போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு விட்டது.

 

Maamannan

 

இந்த போஸ்டரில் வடிவேலு துப்பாக்கியுடனும், நாயகன் உதயநிதி பெரிய கத்தியுடனும் இருக்கிறார்கள். அமைச்சர் உதயநிதி பயங்கர ஆயுதத்துடன் இருப்பது போன்ற போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, வரவேற்பையும் பெற்றுள்ளது.

 

தற்போது ‘மாமன்னன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. படம் வரும் ஜூன் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related News

8968

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery