Latest News :

கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக உருவாகும் ‘பக்கா’
Friday October-06 2017

‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கன்ஸ்டோரியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் அடுத்து மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் படம் ‘பக்கா’.

 

விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நிக்கி கல்ராணி, பிந்து மாதவி ஆகியோர் ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவி மரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி, முத்துகாளை, சிசர் மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் நடிக்கிறார்.

 

எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்க, யுகபாரதி, கபிலன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். கலையை கதிர் நிர்மாணிக்க, கல்யாண், தினேஷ் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். மிராக்கிள் மைகேல் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, சிவகுமார் எடிட்டிங் செய்கிறார். செந்தில்குமார் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். பி. சரவணன் இணை தயாரிப்பு செய்ய, டி.சிவகுமார் தயாரிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.எஸ்.சூர்யா இயக்குகிறார். 

 

படம் குறித்து விக்ரம் பிரபு கூறுகையில், “திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும்  டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கிரிக்கெட் ரசிகரான நான்  டோனி பெயரில் ரசிகர் மன்றம்  நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன். ரஜினி காந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா. ( நிக்கி கல்ராணி) கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியா (பிந்து மாதவி)

இப்படி மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான ’பக்கா’ படம். 

 

நம்மால் மறக்கப்பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக பக்கா இருக்கும். இதுவரை நான்  ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம் எனக்கு புதிய பரினாமத்தை வெளிக்கொண்டு வரும் படமாக அமையும். கமர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இது இருக்கும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் டி.சிவகுமார் படம் குறித்து கூறுகையில், “நாங்கள் தயாரித்த அதிபர் படம் நல்ல படம் என்ற பெயரை பெற்றுத் தந்தது.

பக்கா படம் நல்ல கமர்ஷியல் வெற்றிப் படமாக வரும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தில் நான் ஒரு நல்ல வேடத்திலும் நடித்திருக்கிறேன். இந்த படத்தை தொடந்து ‘தர்மன்’ என்ற படத்தை தயாரிக்க உள்ளோம்.

நடிகர் நடிகை மற்றும் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கிறோம்,” என்றார்.

 

படப்பிடிப்பு முழுவதும் சென்னை, பாண்டி, குற்றாலம், ஐதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 

Related News

897

Anirudh Ravichander Forays Into Artist-Owned Music Business with the Launch of Albuquerque Records
Tuesday February-17 2026

After more than a decade of reshaping Indian film music with award-winning background scores, chart-topping albums, and viral anthems, renowned composer and performer Anirudh Ravichander has announced the launch of Albuquerque Records, an artist-owned music label that marks a defining new chapter in his creative journey...

நான் இங்கு நிற்க விஜயகாந்த் தான் காரணம் - ‘எல்.எஸ்.எஸ்’ பட இயக்குநர் உருக்கம்
Monday February-16 2026

ஜெ.பி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில், ஆர்...

குழந்தைகளின் கற்றலுக்கான ‘கலர் பென்சில்’! - 'கிகி & கொகொ' பட தயாரிப்பாளர்களின் புதிய முயற்சி
Monday February-16 2026

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது...

Recent Gallery