Latest News :

20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் சரத்குமார்!
Monday May-01 2023

ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமார், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் கவனம் ஈர்த்து வருவதோடு, தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகராகவும் உருவெடுத்துள்ளார்.

 

’பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘ருத்ரன்’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து சரத்குமாருக்கு ஏராளமான திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகிறது. தற்போது, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘ஆழி’, ‘போர் தொழில்’, ‘கஸ்டடி’, ’பரம்பொருள்’, ‘ஹிட் லிஸ்ட்’, ’கிரிமினல்’, ‘நிறங்கள் மூன்று’, ‘ஸ்மைல் மேன்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகன், எதிர் நாயகன் வேடங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது மற்றும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பகிர்ந்துக் கொண்ட நடிகர் சரத்குமார், “நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள், மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ் தான் பேசி வருகிறேன். கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன், ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளேன். கலை தான் என் தொழில். 

 

பத்திரிகை நண்பர்கள் எப்போதும் என்னிடம் உரிமையுடன் எதையும் பரிமாறி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் பட புரமோசனில் நான் கலந்துகொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள் ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. 

 

மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார், இப்போது படம் எல்லோரிடத்திலும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் வாய்ப்பு தந்ததற்கு மணிரத்னத்திற்கு லைகா புரடக்‌ஷன் சுபாஸ்கரன் இருவருக்கும் நன்றி. இன்றைய தலைமுறைக்கு என்னை எடுத்து சென்ற வாரிசு படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி. ருத்ரன் வில்லன் பாத்திரம் என்ற போது தயங்கினேன், ஆனால் இப்போதைய ரசிகர்கள் வில்லனாக நடிப்பவர்களை அதே போன்று பார்ப்பதில்லை, அந்த கதாப்பாத்திரத்தை எப்படி செய்துள்ளனர் என்றே பார்க்கிறார்கள். அதனால் தைரியமாக நடித்தேன். 

 

அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன். நான் நாயகனாக நடித்த காலத்தை விட இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும். 

 

அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது, விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 

 

2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு இருந்துள்ளது. அந்த ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி.” என்று தெரிவித்தார்.

Related News

8970

நடிகை சரோஜா தேவி வாழ்க்கை வரலாறு!
Monday July-14 2025

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது - மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி
Monday July-14 2025

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

Recent Gallery