5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘ஃபர்ஹானா’ பட டீசர்!
Monday May-01 2023

’ஜோக்கர்’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘ஃபர்ஹானா’.

 

பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தில் பெண்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை நுணுக்கமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

 

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வரும் மே 12 ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

 

5 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கும் ‘ஃபர்ஹானா’ டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வசனங்கள் பல கேள்விகளை எழுப்பியிருப்பதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.

 

 

தொடர்ந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெற்று வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். 


Related News

8971

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery