Latest News :

வில்லனாக களம் இறங்கும் கெளதம் கார்த்திக்!
Tuesday May-02 2023

’பத்து தல’ மற்றும் ‘ஆகஸ்ட் 16 1947’ என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் கெளதம் கார்த்திக், வில்லன் அவதாரம் எடுக்கிறார். ஆர்யா நாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர்.எக்ஸ்’ (Mr.X) படத்தில் கெளதம் கார்த்திக் வில்லனாக நடிக்கிறார்.

 

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்‌ஷ்மன்குமார் தயாரிக்கும் இப்படத்தை ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் கதை எழுதி இயக்குகிறார். மிக பிரமாண்டமான ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக உள்ள இப்படத்தின் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு உகாண்டா, செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற்ற உள்ளது.

 

‘மரகத நாணயம்’, ‘பேச்சிலர்’, ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் இசையமைக்கும் இப்படத்திற்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்ய, ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்டண்ட் சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, இந்துலால் கவீத் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஏ.பி.பால்பாண்டி தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, உத்ரா மேனன் ஆடை வடிவமைப்பை கவனிக்கிறார்.

 

Mr X

 

தற்போது இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி வைராகி வரும் நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த முழு விபரத்தை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

8972

நடிகை சரோஜா தேவி வாழ்க்கை வரலாறு!
Monday July-14 2025

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது - மனம் திறந்த நடிகர் விஜய் சேதுபதி
Monday July-14 2025

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

Recent Gallery