Latest News :

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் சாதனை படைத்த ஜி.கே.எம்.தமிழ்குமரன்!
Tuesday May-02 2023

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜி.கே.எம்.தமிழ்குமரன், சாதனை வெற்றி பெற்றிருக்கிறார்.

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்  தேர்தல்  2023-2026  ஆண்டுகள் வரை பதவிகளுக்கான  தேர்தல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி  கல்லூரி வளாகத்தில் நீதியரசர்கள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர். இவர்களின் முன்னிலையில் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 1,111 வாக்குகள் பதிவானது.          

 

இதன் படி ’நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 'தேனாண்டாள்' முரளி ராமசாமி 615 வாக்குகளும், துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட ஜி.கே.எம்.தமிழ்குமரன் 651 வாக்குகளும், அர்ச்சனா கல்பாத்தி 588 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். 

 

செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்ட 'ஃபைவ் ஸ்டார்' கதிரேசன் 617 வாக்குகளும்,  ராதாகிருஷ்ணன் 503 வாக்குகளும், இவர்களை தொடர்ந்து பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சந்திர பிரகாஷ் ஜெயின் 535 வாக்குகளும்,  இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சௌந்தர் பாண்டியன் 511 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நலம் காக்கும் அணியினருக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முதல் முறையாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லைகா நிறுவன தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்குமரன், 651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பது சாதனை நிகழ்த்தியுள்ளார். இதுவரை நடைபெற்ற தேர்தலில் எந்த போட்டியாளரும் இவ்வளவு வாக்கு எண்ணிக்கையை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், நலம் காக்கும் அணி சார்பில்  போட்டியிட்ட   'தேனாண்டாள்' முரளி  ராமசாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல், பைவ் ஸ்டார் கதிரேசன் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார். இவர்  இரண்டு முறை துணைத் தலைவராகவும், இரண்டு முறை செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related News

8974

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery