தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா இன்று காலமானார். அவருக்கு வயது 69.
’புதிய வார்ப்புகள்’ உள்ளிட்ட பல படங்களில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோபாலா, ‘ஆகாய கங்கை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ரஜினியின் ‘ஊர்க்காவலன்’, ‘பிள்ளை நிலா’, ‘சிறைபறவை’, ‘மூடு மந்திரம்’, ‘கருப்பு வெள்ளை’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருப்பதோடு, ‘சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
படம் இயக்குவதை நிறுத்திய மனோபாலா நடிப்பில் பிஸியாக இருந்தார். விஜய், அஜித், சூர்யா, கமல், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்ததோடு, தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் எதாவது ஒரு வேடத்தில் தொடர்ந்து நடித்து வந்தார்.
இதற்கிடையே, கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோபாலா, சிகிச்சைக்குப் பிறகு தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.
சென்னை சாலிகிராம இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மனோபாலாவின் உடலுக்கு நடிகர் விஜய், அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...